டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

விருதுநகரில்  வருவாய்துறையினர் கோரிக்கைகளை வலியுறுத்தி வெளிநடப்பு

விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஒரு மணி நேர அலுவலக வெளிநடப்புப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை மாலையில் ஈடுபட்டனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:41 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஒரு மணி நேர அலுவலக வெளிநடப்புப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை மாலையில் ஈடுபட்டனர்.
    
பதிவுரு எழுத்தர்கள், அலுவலக உதவியாளர்களுக்கு தனி ஊதியம் வழங்குவதல்  உள்பட 19 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தப்போவதாக ஏற்கனவே தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கம் அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 121 அலுவலர்கள் வரையில் ஒரு மணி நேர அலுவலக வெளிநடப்புப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர். இதேகோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமையும் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இதனால், ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த் துறை அலுவலர்கள் அலுவலகம் முடிவதற்கு ஒரு மணி நேரம் முன்வே வெளியேறினர். அதைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தின் மாநில செயலாளர் து.கே.பொன்ராஜ், மாவட்ட செயலர் கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தனர். இதேபோல, அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் அலுவலர்கள் வெளிநடப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தினால், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேர்தல் தொடர்பான வீடியோ கான்பரசிங்கிலும் வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்காமல்  புறக்கணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.